Seed Certification
விதை நேர்த்தி
விதை நேர்த்தி


விதை நேர்த்தி என்பது பூஞ்சாணக் கொல்லி, பூச்சிக்கொல்லி போன்றவற்றைத் தனித்தோ (அ) ஒருங்கிணைத்து விதைகளின் மேல் இடுதல் மூலம், அவற்றை மண் மூலம் பரவும் நோய்கள் மற்றும் சேமிப்பில் விதைகளைத் தாக்கும் பூச்சிகள் போன்றவற்றில் இருந்து காத்து தொற்று நீக்குதலே ஆகும். விதை நேர்த்தி செய்வதன் பலன்கள் கீழ்க்கண்டவையாகும்.

விதை நேர்த்தியின் பயன்கள்

  1. பயிர் நோய்களை பரவாமல் தடுக்கிறது.
  2. விதை அழுகல் மற்றும் நாற்றுக்கழுகல் போன்றவற்றிலிருந்து காக்கிறது.
  3. முளைப்புத் திறனை மேம்படுத்துகிறது.
  4. சேமிப்பில் தாக்கும் பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.
  5. மண்ணில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

விதை நேர்த்தி வகைகள்

விதைக் கிருமிகளை நீக்குதல்

  • இம்முறையானது விதையுறையினுள் (அ) விதைகளின் திசுக்களின் ஆழப் பரவி இருக்கும். பூஞ்சாண வித்துக்களை நீக்குதல் ஆகும். திறனுள்ள முறையில் பூஞ்சான் தொற்றுதலை நீக்குவதற்கு பூஞ்சாணக்கொல்லி விதையினுள் ஊடுருவிச் செல்லவேண்டும்

விதைக் கிருமிகளை அழித்தல்

  • விதையின் உட்புறத்தை தாக்காமல், விதையின் மேற்புறத்தில் பரவி இருக்கும் கிருமிகளை அழிப்பதே இம்முறை ஆகும். இராசயன கலவையில் விதைகளைப் பதனம் செய்வது, நனைத்து எடுப்பது, பூஞ்சாணக் கொல்லி பொடிகள், கலவைகள் மற்றும் திரவம் போன்றவை பயனளிக்கும்.

விதைகளைக் காத்தல்

  • விதைகளை முளைக்கும் முன்னரே மண் மூலம் பரவும் கிருமிகளின் தாக்குதலிருந்து விதைகள் மற்றும் இளநாற்றுக்களை பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.
Updated On : Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam